அவசர நீர் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் அவசர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (National Water Supply & Drainage Board) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடை
குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை 8 1/2 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபைப் பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
