சிறிலங்கா காவல்துறையினருக்கு தமிழ்மொழி கட்டாயம்..!
காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என யாழ் பிரதி காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறையினருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்துக்கு இன்று(17) முற்பகல் வருகைதந்த யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க இந்தக் கட்டளைகளை வழங்கினார்.
சிறப்பு கட்டளைகள்
காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறாக உள்ள குற்றச்செயல்களை விரைந்து தடுக்குமாறும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் அதன் பாவனையை முற்றாக ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்ற ஆலோசனைகளையும் பிரதி காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 5 நாட்கள் முன்