யாழில் இலஞ்சம் பெற முயன்ற அரச அதிகாரிகள் சுற்றிவளைப்பு!

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Aug 31, 2025 05:46 AM GMT

யாழில் (Jaffna) இலஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் - போட்டுடைக்கும் சரத் பொன்சேகா

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் - போட்டுடைக்கும் சரத் பொன்சேகா

இலஞ்சம் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் (30) மாதகல் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு மதுவரித்திணைக்கள அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.

யாழில் இலஞ்சம் பெற முயன்ற அரச அதிகாரிகள் சுற்றிவளைப்பு! | Jaffna Excise Officers Caught Taking 2M Bribe

இதையடுத்து, அவரை கைது செய்யாமல் விடுவதற்காக 30 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளனர். இந்தநிலையில் போதைப் பொருளை வைத்திருந்தவர் 20 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்குவதாக ஒத்துக் கொண்டுள்ளார்.

இதன்பின்பு, அவர்கள் சந்தேக நபரை விட்டுவிட்டு இலஞ்சப்பணத்தினை சித்தங்கேணி பகுதியில் உள்ள மதுவரி திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள்.

இன்று மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்

இன்று மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்

போதைப்பொருள் 

போதைப்பொருள் வைத்திருந்தவரின் தரப்பினர் இதுகுறித்து காங்கேஷன்துறை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கிவிட்டு இலஞ்சத்தை கொடுப்பது போல் பாசாங்கு செய்வதற்காக அவர்களது அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு இலஞ்சத்தை கொடுப்பதற்கு முயற்சித்தவேளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் இலஞ்சம் பெற முயன்ற அரச அதிகாரிகள் சுற்றிவளைப்பு! | Jaffna Excise Officers Caught Taking 2M Bribe

கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மூவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளையடுத்து, அவர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரும் தென்னிலங்கை - கெஹல்பத்தர பத்மே கைதால் ஓடி ஒளியும் அரசியல்வாதிகள்

அதிரும் தென்னிலங்கை - கெஹல்பத்தர பத்மே கைதால் ஓடி ஒளியும் அரசியல்வாதிகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026