கிளிநொச்சி பளையில் தொடருந்துடன் மோதி யாழ்ப்பாண குடும்பஸ்தர் உயிரிழப்பு
Jaffna
Kilinochchi
Accident
Death
Train
By Erimalai
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் தொடருந்துடன் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி நல்லூரைச் சேர்ந்த இரத்தினராசா கிருஷ்ணமோகன் (வயது52) என்பவரே உயிரிழந்தவராவார்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி தொடருந்துடன் முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் தொடருந்து பாதையை கடக்க முற்பட்டவேளை குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதையை கடக்க முற்பட்டவேளை சம்பவம்
இவ்விபத்து இடம்பெற்ற வேளை தொடருந்து காவலாளி இப்பகுதியில் காணப்படவில்லை எனவும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்த பகுதியில் இரண்டு தடவைகள் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்