யாழ்.மாவட்ட பிரதான சந்தை ஒன்று முடக்கம்!
corona
jaffna
market
closed
kodikamam
By Kalaimathy
கொடிகாமம் மரக்கறி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட எழுமாற்று பி.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுகாதார பிரிவினரால் சந்தை முடக்கப்பட்டிருப்பதுடன், தொற்று நீக்கம் செய்யப்பட்டு சந்தையில் உள்ள ஏனைய வர்த்தகர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இனிவரும் பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் சந்தையை மீளவும் திறப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்