நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு
Sri Lankan Tamils
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Sathangani
யாழ்ப்பாணம் (Jaffna) - நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
குறித்த அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (24) இரவு மிகவும் சிறப்புற நடைபெற்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் யூலை மாதம் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
பந்தல் அமைக்க நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையிலேயே இப் பந்தல் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய மேற்கு வீதியில் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக நிகழ்ந்த ஆரம்ப வைபவத்தில் ஆலய அடியவர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




ஆயிரம் சிறுவர்களை காவுகொண்ட ஈழ இனப்படுகொலைப் போர்
6 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி