யாழ்.மாநகரில் முதன் முறையாக உருவானது புதிய காவலர் படை!
srilanka
jaffna
By Vasanth
யாழ்.மாநகர பகுதியில் முதன் முறையாக காவலர் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படை தமது பணியை ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காவலர் படை பரீட்சார்த்தமாக இன்றைய தினம் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காகவே புதிய மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாநகர பாதுகாப்பு படை. நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்ட நிலையில் விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்தது.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்