நிலாவரை விவகாரம்- தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளில் தலையிடக்கூடாது! விடுக்கப்பட்ட வலிறுத்தல்

srilanka jaffna
By Vasanth Apr 01, 2021 11:14 AM GMT
Report

நிலாவரையில் தொல்லியல் திணைக்கள பணிகளை மேற்கொண்ட போது இளைஞர்களைத் திரட்டி வந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நிலாவரை பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்க தடை ஏற்படுத்தினார் என தொல்லியல் திணைக்களம் பதிவு செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை செய்ய வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் நேற்றைய தினம் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டார்.

அங்கு மல்லாகம் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் சுப்பிரின்டன் என்.டபிள்யூ.ஜே.சி. ஜெயக்கொடி தலைமையில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமுது பிரசன்ன, தொல்லியல் திணைக்களத்தின் யாழ் - கிளிநொச்சிக்குப் பொறுப்பான பணிப்பாளர் நளின் வீரதுங்க ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.

அதன் போது, தவிசாளர் பெருமளவானவர்களைத் திரட்டி வந்து தொல்லியல் திணைக்களத்தின் பணிகளை தடைசெய்துள்ளார் என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதனால் அது பற்றி பேசவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த தவிசாளர், தொல்லியல் திணைக்களம் எற்கனவே குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்யப்போவதாக கூறியிருந்தது.

ஆனால் அவர்கள் கட்டிட அத்திவாரம் வெட்டுவது போன்று ஆழமாக கிடங்கினை வெட்டியிருந்தனர். அந்த இடத்தில் கட்டிடங்கள் ஏதாவது அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச சபைக்குரிய பொறுப்புணர்வுடன் பார்வையிட நான் சென்றேன்.

அப்போது என்னை இராணுவத்தினர் விசாரணை செய்தார்கள். இதனால் அங்கே சுமூகமற்ற நிலைமை ஏற்பட்டது. மக்கள் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளில் சந்தேகம் கொள்வதனால் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்பட்டே செயற்பட வேண்டும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தினேன்.

அதற்கு பொலிஸ் தரப்பில் இருந்தும் தொல்லியல் திணைக்கள தரப்பிடம் இருந்தும் தொல்லியல் திணைக்கள சட்டத்தின் பிரகாரம் யாரிடமும் அனுமதிபெற வேண்டியதில்லை.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை எனவே இதில் தவிசாளர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர், நிலாவரை விடயத்தில் பிரதேச சபை பகிரங்க கேள்வி கோரலில் கடந்த பலவருடமாக குத்தகைக்கு வழங்கி வருகின்றது.

எனவே எமக்கும் அப் பிரதேசத்தில் நிர்வாக ரீதியிலான அதிகாரம் உள்ளது என தவிசாளர் தெரிவித்தபோது, எனக்கு அதிகாரம் கிடையாது என கடிதம் அனுப்பியுள்ளதாக தொல்லியல் திணைக்கள அதிகாரியிலானால் கூறப்பட்டது. தனிச் சிங்களத்தில் ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றது.

நான் அதனை அரச கருமமொழிகள் திணைக்களத்திற்கு முறைப்பாடாக அனுப்பியுள்ளேன். வடக்குக் கிழக்கில் அரச கருமமொழி தமிழ் என்பதையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற போது தொலலியல் திணைக்கள அதிகாரி தாம் அரச அதிபருக்கே சிங்களத்தில் கடிதம் அனுப்புவதாகவும் பெறுபவர்கள் அதனை மொழிபெயர்த்து புரிந்து கொள்வதாகவும் அலட்சியமாக தெரிவித்தார்.

தாம் யாழ் மாவட்டத்தில் சகல இடங்களிலும் பணிகளை செய்கின்றோம் அங்கு எல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்குதான் பிரச்சினை என தொல்லியல் திணைக்களத்தினால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. மக்களிடத்தில் தங்கள் திணைக்களத்தின் பணிகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதனால் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் கட்டிடங்கள் திருத்தம்,

புதிதாக அமைத்தல் விடயத்தில் சபை அனுமதி பெறப்படவேண்டியது சட்டமாகும் எனவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸ் தரப்பும் தொல்லியல் திணைக்களத் தரப்பும் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்குள் எவரும் தலையிடக்கூடாது எனவும் தவிசாளர் தான் மக்களை அழைத்து வந்து குழப்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளனர்.

தவிசாளர் ஒதுங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அதற்கு தவிசாளர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் நீதிமன்றத்திற்கு விடயம்பாரப்படுத்தப்படுவதாக பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பொலிஸ் தரப்பினால் தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டிற்கான பதில் அறிக்கை தவிசாளரிடம் பெறப்பட்டது.

அதன்போது தவிசாளர் யார் கூறி நிலாவரைக்கு வந்தார். நிலவரையில் நின்ற வண்ணம் யார் யாருடன் தொலைபேசியில் பேசினார், என்ன பேசினார் என தனிமனித சுதந்திரத்திற்குப் புறம்பான விசாராணைகளும் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி