வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிவண்ணன்!
srilanka
police
jaffna
By Vasanth
யாழ்.மாநகர மேயர் வி. மணிவன்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்ப்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு, வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பரிசோதனைகளின் பின்னர் கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்