எமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும்- கொட்டும் மழையிலும் யாழில் போராட்டம்!
sri lanka
jaffna
protest
missing persons
By Kalaimathy
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று காலை 10மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும், சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தின் போது புலனாய்வாளர்கள் அவ்விடத்தில் குவிந்திருந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி