யாழில் ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு...! இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா ரெலிக்கொம் ஊழியர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருநெல்வேலி முருகன் வீதிப் பகுதியில் சிறிலங்கா ரெலிக்கொம் ஊழியர்கள் புதிய இணைப்புக்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாள்வெட்டுத் தாக்குதல்
அப்போது குறித்த வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த வேளை, போக்குவரத்திற்கு இடையூறாக வயர்களை வீதியில் போட்டு வைத்துள்ளதாக ஊழியர்களுடன் முரண்பட்டு ஊழியர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த ஊழியர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் காவல்துறையினர், வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |