யாழில் இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது காவல்துறையினரின் விசேட சோதனை - நால்வர் கைது
நேற்றயதினம்(05) யாழ்ப்பாணம் நகரில் ஊதுபத்தி வியாபாரம், சாத்திரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்மாவட்ட பிரதிகாவல்துறைமா அதிபர் மஞ்சுள செனரத்தின் உத்தரவுக்கமைய யாழ்மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் பிரதீப் தலமையிலான குழு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வெளியிட பணியாளர்கள்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம், அடையாள அட்டை இல்லை என்பதோடு, வேறுபகுதிகளில் இருந்து தவறான நோக்கங்களுக காக வந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நான்கு ஆண்களும் கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக யாழ்நகரில் இப்படியான வெளியிட வியாபாரிகளால் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்டோர் பெரும் சிரமங்களை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.