தாய்லாந்து திறந்த கராத்தே போட்டியில் சாதித்த யாழ். மாணவன்
Jaffna
Thailand
By Shalini Balachandran
தாய்லாந்து (Thailand) திறந்த கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் (Jaffna) மாணவனொருவர் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜோண்றஜீவ் பியன் பெனோ என்பவரே இவ்வாறு மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
இந்தநிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் அவர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
தேசிய அணி
இவர் இலங்கை கராத்தே தேசிய அணிக்கு தெரிவான முதல் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஆவார்.
அத்தோடு, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட 18 வயதிற்கு உட்பட்டோருக்கான தைகொண்டோ போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
