விமானத்தில் பெண்களிடம் ரகளை : கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண தமிழர்
இந்தியாவின்(india) மும்பையிலிருந்து(mumbai) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த யாழ்ப்பாணத்தைச்(jaffna) சேர்ந்த தமிழர் ஒருவர் இன்று (12) காலை கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவரும் தற்போது சுவீடன்(sweden) நாட்டில் வசிப்பவருமான 65 வயதுடையவரே கைது செய்யப்பட்டவராவார்.இவர் இரட்டை குடியுரிமை கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
விமான பணிப்பெண்களிடம் பாலியல் சேஷ்டை
குறித்த நபர் அதிக மது போதையில், சக பயணிகளிடம் மோசமாக நடந்துகொண்டதுடன், விமான பணிப்பெண்களிடமும் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டுநாயக்காவில் கைது
அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய காவல்துறையினருடன் சேர்ந்து வந்து பயணியைக் கைது செய்தனர்.
மேலும், பயணியை மருத்துவப் பரிசோதனைக்காக காவல்துறையினர் பரிந்துரைத்தனர், அங்கு அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, அவர் நீதிமன்றத்தில் இன்று (12) முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்