திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்துக்கு விடுதலை -வெளியானது அறிவிப்பு
srilanka
jaffna
thirunelveli
By Vasanth
திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதி கண்காணிப்பு வலயத்திலிருந்து நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் விலக்கப்படுகிறது.
இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். "திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் 14 நாள்களாக கண்காணிப்பு வலயமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பாரதிபுரம் பகுதியில் 88 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனால் பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணி தொடக்கம் கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது" என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி