யாழில் 4 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் சிக்கிய இருவர்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் சுமார் 104 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றில் இன்று(29) அதிகாலை குறித்த சந்தேகநபர்கள் கேரள கஞ்சாவுடன் பயணித்தபோது கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இந்த 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 40 வயதுடைய மடகல் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
மேலும், சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்