யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 18ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன் முதல் நிகழ்வே இன்று (12) திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஆலடி பகுதியில் இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
பல்கலைக்கழக மாணவர்களால் அப்பகுதி மக்களிடம் அரிசி சேகரிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு சிரட்டைகளில் பொதுமக்களுக்கும் வீதியில் சென்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார காலப்பகுதியை துக்கதினமாக தமிழ் மக்கள் அனுஷ்டிக்க வேண்டும்.
கேளிக்கை ரீதியான நிகழ்வுகளையோ நினைவுகூறலை அவமதிக்கும் வகையான செயற்பாடுகளை இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் தவித்துக் கொள்ள வேண்டும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதன்போது கோரிக்கை விடுத்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







