சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரின் நினைவேந்தல்!
jaffna
memorial
urumpirai
By Kalaimathy
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 35 வது நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் ஸ்ரீ சபாரத்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இடத்திலேயே குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என்போர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்