கட்டுநாயக்கவுடன் முடிந்த யாழ்.யுவதியின் வெளிநாட்டு பயணம்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (18) கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பெண்ணிடம் போலி கடவுச்சீட்டு, போலி ஏறும்தாள் (boarding pass) மற்றும் போலி குடிவரவு முத்திரை (immigration stamp) ஆகியன இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த இந்த இளம்பெண், துபாயை வழியாக இத்தாலி பயணிக்க திட்டமிட்டு, போலி ஆவணங்களை பயன்படுத்தி குடிவரவு அதிகாரிகளை ஏமாற்ற முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பொய்யான தகவல்களை வழங்குதல், அரசு ஆவணங்களைப் போலியாகக் கையாளுதல், வெளிநாட்டு விசாவுடன் சட்டவிரோதமாக பயணிக்க முயற்சி செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
