யாழில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தோரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47 வது நினைவு அஞ்சலி நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றுக் காலை 9.30 மணிக்கு யாழ். முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப் படுகொலைச் சம்பவம் பதியப்பட்டுள்ளது.