யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு

Ministry of Education Human Rights Commission Of Sri Lanka Jaffna
By Independent Writer Oct 12, 2025 07:56 AM GMT
Report

யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர்  (Jaffna educational zone) நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகம் தமக்கு அறிக்கை தர வேண்டும் என எழுத்து மூலம் கடிதம் அனுப்பி உள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, “கல்வி அமைச்சின் செயலாளரால் செய்யப்பட்ட விடயங்கள் சரியான செயல் ஒன்றை பிழையான வழியில் செய்தல் என்ற நடைமுறை ரீதியான அதிகார வரம்பு மீறல் ஆகும்.

ஈழப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் சாட்சியங்கள்!

ஈழப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் சாட்சியங்கள்!

அதிகார வரம்பு மீறல் 

மேற்கொள்ளும் தீர்மானங்கள் அதிகார வரம்பு மீறிய (untra Virus) செயலாக கொள்ளப்படுகின்றன. ஒரு பொது அதிகாரசபை ஒன்று தன் அதிகாரத்திற்கு வெளியே செயற்பட்டு அத்தகைய செயல் அதிகார வரம்பு மீறிய செயலாக வருதல் பின்வரும் 03 வகைக்குள் உள்ளடக்கப்படும்.

தவறான செயலொன்றை செய்தல், சரியான செயலொன்றை பிழையான வழியில் செய்தல், சரியான செயலொன்றை சரியான வழியில் பிழையான நோக்கத்திற்கு செய்தல்.

யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு | Jaffna Zonal Education Director Appointment Hrcsl

இதனடிப்படையில் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் செயலாளரால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையானது சரியான செயலொன்றை பிழையான வழியில் செய்தல் என்ற நடைமுறை ரீதியான அதிகார வரம்பு மீறலென ஆணைக்குழு கருதுகிறது.

மேலும் ஏற்கனவே வலுவில் இருந்த கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளினது இடமாற்றக்கொள்கை வலுவிழந்திருக்கும் நிலையில் புதிய இடமாற்றக் கொள்கையை உருவாக்கி அதன்படி மேற்கொள்ளவேண்டிய இடமாற்றங்களை தன்னுடைய தற்துணிவின் அடிப்படையில் மேற்கொண்டமையானது அதிகார வரம்பு மீறல் செயல் என ஆணைக்குழு கருதுகிறது.

இது அடிப்படை உ ரிமைகளில் சட்டத்தின்முன் யாவரும் சமம் என்பதோடு சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கும் உரித்துடையவர்கள் என்ற உறுப்புரை 12(1) இனை மீறும்செயல் என ஆணைக்குழு அவதானித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு நிச்சயம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு நிச்சயம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு

ஆளுநரால் மீள்பரிசீலனைச் செய்யப்படல்

எனவே யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம் வெளிப்படையானதாகவும் கடந்த கால வழக்கங்களை பின்பற்றி முதுநிலை ஒழுங்குவரிசையின் அடிப்படையிலும் மேற்கொள்வதற்கு வடமாகாண ஆளுநரால் மீள்பரிசீலனைச் செய்யப்பட வேண்டுமென இவ் ஆணைக்குழு பரிந்துரைக்கிறது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற வழக்கிலக்கமான 2397/18 எனும் வழக்கினை முறைப்பாட்டாளர் உதாரணம் காட்டியதன் அடிப்படையில் மேலும் குறித்த வழக்கிலே மூப்பு அடிப்படையில் வெற்றிடமாக உள்ள கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்ள பிரதிவாதியான வடக்கு மாகாண கல்வி அமைச்சு அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் முடிவுறுத்தப்பட்டமையும் முறைப்பாட்டாளர் வாதத்திலே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு | Jaffna Zonal Education Director Appointment Hrcsl

வலயக் கல்விப்பணிப்பாளர் பதவியானது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட நியமனத்திற்கு முன்னர் ஒரு பதில் நியமிப்பு அடிப்படையில் ஒரு கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்பட்ட நிலையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படாத நிலையில் கல்வி அமைச்சின் செயலாளரின் சிபாரிசின் அடிப்படையிலயே ஒருவரை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தகுந்த காரணங்கள் காட்டப்படவில்லை.

பிரதிவாதத்திலே முறைப்பாட்டாளருக்கு எதிராக குற்றசாட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் குற்றசாட்டுப்பத்திரம் வழங்கப்பட்டதை மாத்திரம் அடிப்படையாயக கொண்டு முறைப்பாட்டாளர் குற்றமிழைத்தவர் என அனுமானிக்கமுடியாது என ஆணைக்குழு கருதுகிறது.

எனவே குற்றச்சாட்டுப்பத்திரம் வழங்கப்பட்டமையினாலயே யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் சிபாரிசில் முறைப்பாட்டாட்டாளர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற பிரதிவாதிகளின் வாதத்தை ஏற்கமுடியாது.

இவ்வாண்டின் இறுதிக்குள் சம்பள உயர்வு நிச்சயம் : உறுதியளிக்கும் ஜனாதிபதி!

இவ்வாண்டின் இறுதிக்குள் சம்பள உயர்வு நிச்சயம் : உறுதியளிக்கும் ஜனாதிபதி!

கல்வி அமைச்சின் செயலாளர் 

மேலும் ஏற்கெனவே யாழ்ப்பாண வலய பதில் கல்விப் பணிப்பாளரமாக இருந்த இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த அதிகாரி வலிகாமம் வலயக் கல்விப்ப பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே குறித்த அதிகாரியை யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளராக தொடர்ந்து நிரந்தாமாக நியமிக்க ஏன் கல்வி அமைச்சின் செயலாளரால் சிபாரிசு செய்யப்படடவில்லை என்பதும் அவதானிக்கதக்கது.

யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு | Jaffna Zonal Education Director Appointment Hrcsl

எனவே கல்வி அமைச்சின் செயலாளர் சிபாரிசானது தனது விருப்பதெரிவேயன்றி உரிய நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பது ஆணைக்குழுவின் அவதானிப்பாகும்.

இவ்விசாரணை அறிக்கையினை வடமாகாண ஆளுநருக்கு முன்னிலைப்படுத்துவதுடன் மேற்படி எமது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் தங்களால் எடுக்கப்படும நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 15.07.2025 ற்கு முன் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவும்.

இவ்விடயமானது 1996 ஆம் ஆண்டின் 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் தேவைப்படுத்தப்படுகின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் - சர்ச்சையை கிளப்பும் சரத் பொன்சேகா

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் - சர்ச்சையை கிளப்பும் சரத் பொன்சேகா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026