யாழில் கல்லூரியொன்றின் கணனி ஆய்வுகூடம் உடைத்து பெறுமதியான உபகரணங்கள் திருட்டு
jaffna
school
stolen
computer
By Jaso
யாழ் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள கணனி ஆய்வுகூடம் உடைக்கப்பட்டு உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளமை நேற்று 13.04.2021 மாலை அவதானிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் பெய்த மழைக்கு பின்னரே இந்த சம்பவம் நடந்துள்ளமைக்கான சான்றுகள் பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அன்றாட பாவனையிலுள்ள கணனிகள், பல்லூடக எறிகாட்டி மற்றும் அச்சுப்பொறிகள் உள்ளடங்கிய பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதுடன். இன்னும் ஒரு தொகுதி பொருட்கள் பொதி செய்யப்பட்டு கொண்டு செல்வதற்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபரினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த காவல்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்