பானங்களில் குளிக்கக்கூடிய நீரூற்று : வினோதமான தீம் பார்க் எங்குள்ளது தெரியுமா!
பூமிக்கு அடியில் ஏற்படும் நீரூற்றுகளைப் பற்றி நாம் பெரிய அளவில் கேள்விப்பட்டிருப்போம். சிலர் அதில் நீராடவும் செய்திருப்பார்கள்.
இதற்கமைய, ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு தீம் பார்கில், இயற்கையாகவே வெந்நீர் ஊற்று உள்ளது.
இதில் இயல்பாக குளிப்பது என்பதை தாண்டி, மக்கள் தங்களுக்கு விருப்பமான பானங்களை கலந்து அதில் குளிக்க முடியும்.
தீம் பார்க்
ஜப்பானில் உள்ள Hakone Kowakien Yunessun எனும் தீம் பார்க்ல் உள்ள முக்கியமான சிறப்பு அம்சமே இதுதான்.
கிரீன் டீ, ரெட் வைன் மற்றும் கோப்பி போன்ற 26 வகையான பானங்களை வெந்நீர் ஊற்றில் கலந்து அதில் குளிக்க முடியும்.
இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ரெட் வைன் ஊற்றில் குளிக்க அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைன் குளியல் ஒரு பெரிய 3.6 மீட்டர் உயர போத்தலைக் கொண்டுள்ளது.
சிறப்பு ஊற்றுகள்
மேனியை மிளிரவைக்கும் சிறப்பு ஊற்றுகளும் இந்த தீம் பார்க்கில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கமைய, மலைகளால் சூழப்பட்டுள்ள இடத்தில் கிரீன் டீ வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது.
இந்த தீம் பார்க்கில் உள்ள விசேட அம்சம் காரணமாக அதிகளவான பயணிகள் குறித்த பகுதிக்கு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |