சூறையாடப்பட்ட தமிழ் இளைஞர்களின் உடல்கள்: அதிர வைக்கும் ஜப்பானிய புலனாய்வாளரின் அறிக்கை
சிறிலங்கா பாதுகாப்பு படையினர் தமிழ் இளைஞர்களிடம் இருந்து உடல் உறுப்புக்களை சூறையாடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தொடர்பில் ஆராய ஜப்பானின் (Japan) சிறப்பு புலனாய்வு செய்தியாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதையடுத்து, இலங்கையில் வசித்து வந்த ஜப்பானிய பிரஜை ஒருவருடன் இணைந்து தனது புலனாய்வு நடவடிக்கையை அவர் மேற்கொண்டார்.
இந்தநிலையில், ஜேவிபியுடனான கலவரத்தில் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் தமிழ் இளைஞர்களிடம் இருந்து உடல் உறுப்புக்களை சூறையாடியதை ஆய்வில் அவர்கள் கண்டறிந்தனர்.
இதன்பின்பு, அவர் திரட்டிய தகவலை கொண்டு அவரால் உருவாக்கப்பட்ட ஆய்வறிக்கையை அவர் ஜப்பானிய பத்திரிகையொன்றில் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, குறித்த செய்தியை ஒரு அரச சார்பற்ற நிறுவனமொன்று வெளியிட்டதையடுத்து, அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்றிலும் வெளிவந்து பாரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது.
இவ்வாறு, அவரது ஆய்வறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள், சம்பவத்தில் மறைந்திருக்கும் உண்மைகள் மற்றும் பலதரப்பட்ட விடங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
