ஜப்பானிய நிதியமைச்சர் இலங்கை விஜயம்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Japan Sri Lanka Relationship
By Dilakshan
ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இன்று (11) பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு.பிரமித பண்டார தென்னகோன் வரவேற்றுள்ளார்.
உத்தியோகபூர்வ கலந்துரையாடல்
அத்துடன், இந்த விஜயத்தின்போது ஜப்பானிய நிதியமைச்சர் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் இலங்கையில் நாடாளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் மஹரகமவில் உள்ள லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்