யப்பானில் இருந்து இலங்கை வந்த தாயும் மகனும் மாயம்: கணவர் முறைப்பாடு
Sri Lanka Police
Sri Lanka Tourism
Japan
By pavan
இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய மனைவியும் அவரது மகனும் மீண்டும் நாடு திரும்பவில்லையென ஜப்பானியர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணும் அவரது மகனும் கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாகவும், ஓகஸ்ட் 22 ஆம் திகதி அவர்கள் மீண்டும் ஜப்பானுக்கு நாடு திரும்பியிருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு
இருப்பினும், மனைவியும், மகனும் நாடு திரும்பாத காரணத்தினால் ஜப்பானிய பிரஜையான பெண்ணின் கணவர் நேற்று (14) சுற்றுலாப்பிரிவில் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்