அரசாங்க உயர்பீடத்தில் பதவி மாற்றம்
jayasundera
resig
By Vanan
அரச தலைவரது செயலாளர் பதவியில் இருந்து P.B.ஜயசுந்தர விலகியுள்ளமையை அரச தலைவரது ஊடகப் பிரிவு உறுதிசெய்துள்ளது.
அரச தலைவர செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வுடன், அவர் விடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் அண்மையில் தனது இராஜினாமா கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்திருந்தாலும், அதனை அரச தலைவர் முதலில் நிராகரித்து, பின்னர் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் இந்த பதவி மாற்றம் இடம்பெற்றுள்ளது.
இதனால், குறித்த வெற்றிடத்திற்கு காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி