ட்ரம்பின் ஈரான் போர் முடிவிற்கு ஜே.டி. வான்ஸ் முழு ஆதரவு!
ஈரான் மீது போர் தொடுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவிற்கு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரான் அணுஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதே தமது மிக முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இடைத்தேர்தல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
ஈரானிடம் அணுஆயுதம் இருந்தால் அவர்கள் அதனை நிச்சயம் பயன்படுத்துவார்கள் என வான்ஸ் எச்சரித்துள்ளார்.
இறுதி முடிவை எடுப்பவர் ட்ரம்பே எனவும் தேவைப்பட்டால் ஈரான் போரை மீண்டும் மேற்கொள்வேன் என ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய வான்ஸ், ட்ரம்புக்கு ஆதரவளிப்பதே தமது கடமை எனத் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததற்கு ஈரான் போரும் ஒரு காரணம் என வான்ஸ் முன்னர் தெரிவித்த கருத்து குறித்துத் தமக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை என ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஈரான் போர் குறித்து வெள்ளை மாளிகைக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக எழுந்த ஊகங்களுக்கு மத்தியில் ட்ரம்பும் வான்ஸும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதை இச்செய்தியாளர் சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |