அநுர அரசாங்கத்தின் தந்திரோபாயம்! அம்பலப்படுத்தும் ஜீவன் தொண்டமான்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்ற மலையக சமூகத்தினருக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, பொது மக்களை திசை திருப்புவதற்கான தந்திரோபாயம் மட்டுமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகநூல் பதிவு
மேலும் அவருடைய பதிவில், “இன்று வழங்கப்படும் இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். இந்நிகழ்வானது, 2000 காகிதத் தாள்களை கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே, "2000 வீடுகளை கையளிப்பது அல்ல!".
கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களை திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே.
குறிப்பாக வேதனம் அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
