மகிந்தவை சந்தித்தார் ஜீவன் தொண்டமான்
Ceylon Workers Congress
Mahinda Rajapaksa
Jeevan Thondaman
By Sumithiran
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட பிரதிநிதிகள் நேற்று(28) சந்தித்து கலந்துரையாடினர்.
இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் நேற்று (28) தங்காலை, கால்டன் இல்லத்தில் சந்தித்தனர்.
மகிந்தவின் உடல்நிலைகுறித்து நலம் விசாரிப்பு
இந்த சந்திப்பின் போது, அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சுகநிலை குறித்தும் நலம் விசாரித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நேற்றையதினம் மகிந்த ராஜபக்சவை சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
