அமேசானின் பங்குகளை விற்கும் ஜெப் பெசோஸ் ! அடுத்த திட்டம் என்ன தெரியுமா....
அமேசோன் விற்பனைத் தளத்தின் நிறுவுனரான ஜெப் பெசோஸ் அமெரிக்க ஆணையத்துக்கு அளித்த அறிக்கையில், அமேசோன் நிறுவனத்தின் ஏராளமான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 07 மற்றும் 08ஆம் திகதிகளில் அமேசோனின் 1கோடியே 19இலட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பங்குகளின் மதிப்பு சுமார் 200 கோடி அமெரிக்க டொலர் மதிப்புள்ளவை எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனத் தரிப்பிடத்தில்
சியாட்டலை பிரதான தலைமையிடமாகக் கொண்டுள்ள அமேசோனின் நிகர மதிப்பு 2 இலட்சம் கோடி அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக காணப்படுகிறது.
மேலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் வாகனத் தரிப்பிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமேசோன் நிறுவனமானது இன்று உலகம் முழுவதும் செயற்படும் விற்பனை நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது.
மற்ற திட்டங்கள்
தற்போது கணிசமானளவு பங்குகளை பெசோஸ் விற்பனை செய்துள்ள நிலையில் மேலும் 840 கோடி அமெரிக்க டொலர் மதிப்புள்ள அமேசோனின் 5 கோடி பங்குகளை விற்கவுள்ளதாகவும் மற்றொரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பெசோஸ், 2021ஆம் ஆண்டில் அமேசோனின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய அவர் தனது மற்ற திட்டங்களான, ஏவுகணை நிறுவனம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த முடிவெடுத்து அவற்றிற்காக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |