ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு (Jerome Fernando) விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை முழுமையாக நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நிலுபுலி இலங்காபுர (Nilupuli Lankapura) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இனங்களுக்கு இடையே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பிரசங்கம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பயணத் தடையை நீக்குதல்
வெளிநாடுகளில் நடைபெறும் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்குத் தடையாக உள்ளதாகத் தெரிவித்து பயணத் தடையை நீக்க உத்தரவிடக் கோரி அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையிலேயே அவருடைய வெளிநாட்டுப் பயணத்தடையை முழுமையாக நீக்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் குறித்த வழக்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |