ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..!

Joe Biden Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Dharu Feb 21, 2023 04:04 AM GMT
Report

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்க அதிபர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை நெருங்குகிறது.

10 மணி நேரம் பயணம்

ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் பெப்ரவரி .20,21, 22-ம் திகதிகளில் சுற்றுப் பயணம் செய்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவர் உக்ரைன் செல்வாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அமெரிக்க அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ சிறப்பு சிறப்பு விமானத்தில் வாஷிங்டனில் இருந்து போலந்துக்கு புறப்பட்டார்.

போலந்து தலைநகர் வார்சாவில் அவரது விமானம் தரையிறங்கியது. அங்கிருந்து சிறப்பு தொடருந்து மூலம் 10 மணி நேரம் பயணம் செய்து, நேற்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் வந்தடைந்தார்.

அமெரிக்க ஏவுகணைகள்

ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President

அவரது பயணம்மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. விமானத்தில் பயணம்செய்தால், ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் புகையிரதத்தில் அவர் உக்ரைன் சென்றதாக கூறப்பட்டது.

ஒருவேளை, புகையிரதம் மீது ரஷ்ய இராணுவம் திடீர்தாக்குதல் தொடுத்தால் அதை முறியடிக்க போலந்து, உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கீவ் தொடருந்து நிலையத்தில் இறங்கிய அதிபர் ஜோ பைடன், அங்கிருந்து சிறப்பு வாகனத்தில் மேரின்ஸ்கி அரண்மனைக்கு வந்தார். அவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார்.

ஜோ பைடன்

ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President

இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது,

''ஓராண்டுக்கு முன்பு உக்ரைன் மீதுதாக்குதல் தொடங்கப்பட்டது. அந்த நாடு வீழ்ந்துவிடும் என்று சிலர் கூறினர்.ஆனால் ஓராண்டாக உக்ரைன் கம்பீரமாக எழுந்து நின்று போராடுகிறது.

அமெரிக்கா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் உக்ரைனுக்கு துணை நிற்கிறது. உக்ரைன் இராணுவத்துக்கு அதிநவீன ஹிமர் ஏவுகணைகள், கவச வாகனங்கள், வான்பரப்பை கண்காணிக்க அதிநவீன ரேடார்கள் வழங்கப்படும்.

புதினின் கனவு தகர்ந்துவிட்டது

ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President

கூடுதலாக 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவோம். உக்ரைன் மக்களின் நலனுக்காக அமெரிக்க வரவுசெலவு திட்டத்தில் தாராளமாக நிதி ஒதுக்கப்படுகிறது.

உலக வரைபடத்தில் இருந்து உக்ரைனை அழித்துவிட வேண்டும் என்று ரஷ்யா விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. ரஷ்ய அதிபர் புதினின் கனவு தகர்ந்துவிட்டது. ரஷ்ய இராணுவம் ஆக்கிரமித்து வைத்த பகுதிகளில் பாதி மீட்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஓராண்டுக்கு முன்பு உக்ரைன் மீது போர் தொடுத்தார். ‘உக்ரைன் பலவீனமாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளிடம் ஒற்றுமை கிடையாது. எனவே போரில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்’ என்று புதின் கனவு கண்டார்.

புதின் என்ன நினைக்கிறார்

ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President

தனது கணிப்பு மாபெரும் தவறு என்பதை இப்போது உணர்ந்திருப்பார். புதின் என்ன நினைக்கிறார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். இப்போது ரஷ்யாவில் இருந்து திறமையான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர்.

அவர்கள் போருக்கு அஞ்சி ஓடவில்லை. ரஷ்யாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதால், தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தப்பிச் செல்கின்றனர். அடுத்த ஒரு வாரத்தில் ரஷ்யாவுடன் தொடர்புடைய அமைப்புகள், நிறுவனங்கள் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.'' என தெரிவித்தார்.

ஆயுதங்களை வழங்குவதாக உறுதி

ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President

இதன் போது கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி , ‘‘அமெரிக்க அதிபர் பைடனின் வருகை உக்ரைன் மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

எங்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதாக அவர் உறுதி அளித்ததற்கு நன்றி’’ என்றார்.

உக்ரைன் தலைநகர் கீவில் சுமார் 5 மணி நேரம் தங்கியிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று மாலை தொடருந்து மூலம் போலந்துக்கு சென்றார்.'' என தெரிவித்தார்.

ஜோ பைடனின் உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய தரப்புக்கு அமெரிக்க அரசு தரப்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ரஷ்ய இராணுவம் நேற்று எவ்வித தாக்குதலும் நடத்தவில்லை என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025