உச்சக்கட்ட சினத்தில் ஈரான் - மத்திய கிழக்கு நாடுகள் மீது குண்டு மழை
ஈரானின் “கண்காணிப்புத் தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்பு, நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்கள்” மீதான தொடர்ச்சியான ஏழாவது இரவுத் தாக்குதல்களை நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
லோரெஸ்தான் மாகாணத்தின் கோர்ரமாபாத் நகரில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத்திலிருந்து அமெரிக்கா ஏவிய ஏவுகணைத் தாக்குதல்களின் விளைவாக இந்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக அந்தச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலடியாக பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மர்ம முடிச்சுக்களுடன் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் - துப்பாக்கி கொடுத்த அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்
இடைமறித்து வீழ்த்தியதாக வான் பாதுகாப்பு
இந்நிலையில், ஜோர்டானின் வான்பரப்புக்குள் சனிக்கிழமை அதிகாலையில் நுழைந்த ஈரானிய ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து வீழ்த்தியதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் வழக்கமான தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோர்டான் இராணுவம் கூறியது.
இந்த இடைமறிப்பு நடவடிக்கைகளால் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும், ஏவுகணைகள் விழுந்த இடங்களிலிருந்து சிதிலமடைந்த பாகங்களை அகற்றி அப்பகுதிகளைப் பாதுகாப்பானதாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அது மேலும் தெரிவித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |