ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விடயத்தில் மறுக்கப்பட்ட நீதி - 15 ஆண்டுகள் கடந்தும் தொடர்கதை....

murder memorial joseph pararajasingham 15th
By Vanan Dec 25, 2021 12:05 PM GMT
Report

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விடயத்தில் சர்வதேச நாடுகள் மீது கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சார்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நீதியை பெற்றுத் தரவில்லை என அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் 15 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முகப்புத்தக சமூக வலைத்தளத்தில் பா.அரியநேத்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அனுதாப கவலையை மாத்திரமே வெளியிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு. காலிமுகத்திடலில் அமைதியாக சத்தியாகிரகம் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் பிரதிநிதிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்த வரலாறு காணப்படுகிறது.

2004 தொடக்கம் 2009, வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் உட்பட மாமனிதர் ரவிராஜ், மாமனிதர் சிவனேசன், ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வரலாறு ஊடாக இலங்கையின் ஆட்சி எப்படிப்பட்டது என்பதை சர்வதேசம் புரியவேண்டும்.

மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும் என அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் மஹிந்த - கோட்டாபய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறிய பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரையும் முழுமையாக குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எஸ் சூசைதாசன் உத்தரவிட்டிருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு 12:15 அளவில் மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் சுட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026