யாழில் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை
jaffna
journalist
human rights
threat
By Sumithiran
மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து பருத்தித்துறை காவல் நிலையத்துக்குள் வைத்து ஊடகவியலாளர் மீது துப்பாக்கியைக் காண்பித்து காவல்துறை உத்தியோகத்தர் அச்சுறுத்திய விடயம் தொடர்பாக காவல்துறையினர் முறைப்பாட்டை பெற்றுக்கொண்டனர்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளரிடமே பருத்தித்துறை காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உத்தியோகத்தர் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, அநாகரிகமாகவும் பேசியும் உள்ளார்.
இந்தச் சம்பவத்தை இரண்டு பேருக்கும் இடையே இணக்கத்துடன் முடிக்க காவல் நிலைய பொறுப்பதிகாரி முயற்சித்த போதும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி - யாழில் துப்பாக்கி முனையில் ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த காவல்துறை உத்தியோகத்தர்!
மரண அறிவித்தல்