பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாவனை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஜூலி சங்!
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கைதுகள் இடம்பெறுகின்றமை கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது கைது செய்யப்பட்டு குறித்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், மனிதாபிமான ரீதியில் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜூலி சங், இதனை தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாடு
அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைது செய்யப்படுவது, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் ஆகியன கரிசனையை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
It is concerning to hear about continued use of the PTA, including to arrest peaceful protesters, and about treatment of detainees in prisons. It’s vital to ensure freedom of expression and humane treatment of those in custody. Especially as the government looks to replace the…
— Ambassador Julie Chung (@USAmbSL) December 1, 2023
அத்துடன், கருத்து சுதந்திரத்தையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
