மகாராணியின் இறுதி சடங்கிற்கு சென்று சர்ச்சையில் சிக்கிய ஜஸ்ரின் ட்ரூடோ..!
இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் கடந்த 8 ஆம் திகதி மரணம் அடைந்தார்.
அவரின் இறுதி சடங்கு லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.
கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்
இந்த நிலையில் ராணியின் இறுதி சடங்குக்கு முன்பாக ஜஸ்ரின் ட்ரூடோ லண்டனில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பியானே வாசித்தபடி மகிழ்ச்சியாக பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனால் ஜஸ்ரின் ட்ரூடோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார். கனடா நாட்டினர் பலரும் சமூக வலைத்தளங்களில் ஜஸ்ரின் ட்ரூடோவை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர் "ராணியின் மறைவுக்கான துக்கத்தில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது அவமானம்" என குறிப்பிட்டுள்ளார்.
I actually love a good piano bar. Haven’t gone to one since before COVID, this reminds me I should check one out near me.
— Brian Lilley (@brianlilley) September 19, 2022
PM at the Savoy in London last night singing a little Queen….for the Queen… pic.twitter.com/yyCxIRAbJl
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,