இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்க்கட்சியும் ஜேவிபியும் காரணம் : மொட்டு கட்சி குற்றச்சாட்டு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பொறுப்பு கூற வேண்டுமென சிறிலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி காலத்தில் வரிகளை குறைக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு குறித்த இரு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்ததாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தமது கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் இலங்கையின் பொருளாாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் கடந்த 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச தோல்வியை எதிர்நோக்கிய போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக பதிவாகியிருந்ததாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், 2020 ஆம் ஆண்டளவில் அது 2 வீதத்துக்கு குறைவடைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன பொறுப்பு கூற வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
வரி குறைப்புக்கள்
இந்த நிலையில, கடந்த 2019 ஆம் ஆண்டு சிறிலங்காவின் அதிபராக பதவியேற்ற கோட்டபாய ராஜபக்ச தமது கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப வரிகளை குறைத்திருந்ததாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு – மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய
மக்கள் ஆணை மூலம் தெரிவு செய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ச வரிகளை குறைக்க நடவடிக்கை எடுத்தமை பொருளாதார நெருக்கடிக்கு காரணமென கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சியினர் எதன் அடிப்படையில் கோட்டாபயவின் ஆட்சி காலத்தை தவறான முறையில் வெளிக்காட்ட முயற்சிக்கிறாரர்கள் எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்