இலங்கையில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

Sri Lanka Income Tax Department
By Eunice Ruth Nov 19, 2023 02:02 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 1 இலட்சத்து 98 ஆயிரத்து 253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக லசந்த அழகியவண்ண தலைமையில் அரச பொதுக் கணக்குகள் குழு (கோபா) அண்மையில் கூடியிருந்தது. 

இதன் போது, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முன்வைத்த விடயங்களின் மூலம் குறித்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

வரி செலுத்துபவர்கள்

இதற்கமைய, 18 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 16 மில்லியன் மக்கள் வரி செலுத்துபவர்களாக இணங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : உள்நாட்டு இறைவரித் திணைக்களம் | New Taxpayers Registered Inland Revenue Department

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு – மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு – மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இந்த தரப்பினரை வரி செலுத்துதலில் இணைப்பதற்கான விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக பொதுமக்கள் செலுத்தும் பெறுமதி சேர் வரியை  அரசாங்கம் முறையாகப் பெறுகிறதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

பெறுமதி சேர் வரி 

இலங்கையில் தற்போது சுமார் 13 ஆயிரம் நிறுவனங்கள் பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : உள்நாட்டு இறைவரித் திணைக்களம் | New Taxpayers Registered Inland Revenue Department

உலக கிண்ண இறுதிப்போட்டியில் பரபரப்பு (காணொளி)

உலக கிண்ண இறுதிப்போட்டியில் பரபரப்பு (காணொளி)

இந்த நிறுவனங்கள் குறித்த வரியை அரசாங்கத்திற்கு செலுத்துவது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவைளை, பொதுமக்களிடம் இருந்து பெறுமதி சேர் வரியை வசூலிக்கும் நிறுவனங்கள் சரியான முறையில் வரியை அரசாங்கத்திற்கு செலுத்தவதற்கான அமைப்பை தயார் செய்ய வேண்டும் என குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ரமிஸ் எனும் வருமான நிர்வாக முறை

அவர்களுல் பலரும் வரி ஏய்ப்பு செய்வதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதற்கு முன்னர் ரமிஸ் எனும் வருமான நிர்வாக முறையைப் பயன்படுத்தி வரி வசூலை ஒழுங்குபடுத்துவதற்கு தீர்மானித்திருந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இந்த கணனி அமைப்பை கையகப்படுத்தி பராமரிக்க வாய்ப்பு உள்ளதா என அதிகாரிகளிடம் குழுத் தலைவர் கேட்டறிந்துள்ளார்.

இலங்கையில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : உள்நாட்டு இறைவரித் திணைக்களம் | New Taxpayers Registered Inland Revenue Department

இறுதிப்போட்டியில் மண்ணை கவ்வியது இந்தியா! அவுஸ்திரேலியா உலக சாதனை

இறுதிப்போட்டியில் மண்ணை கவ்வியது இந்தியா! அவுஸ்திரேலியா உலக சாதனை

இதையடுத்து, முறையான மனித வளம் இல்லாததால், இந்த அமைப்பை கையகப்படுத்தி பராமரிக்க முடியாது என உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தங்கள் அமைப்பை உடனடியாக மேம்படுத்தி, ரமிஸ் அமைப்புடன் இணைக்க,நிறுவனப் பதிவாளர் துறைக்கு, குழு பரிந்துரைத்துள்ளதுடன், அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன் குழுவில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்!  
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024