இலங்கையை பௌத்த நாடாக ஏற்றுக் கொண்டவரே தமிழ் பொது வேட்பாளர் : செல்வராஜா கஜேந்திரன் சாடல்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் (P. Ariyanethiran) இலங்கையை பௌத்த நாடாக ஏற்றுக் கொண்டவர் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran)தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று (21.08.2024) இடம்பெற்ற துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றை ஆட்சி
மேலும் அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலையை உறுதிப்படுத்தக் கூடிய சாத்தியமான ஒரே ஒரு வழிமுறை இலங்கையினுடைய ஒற்றை ஆட்சி முறைமை ஒழிக்கப்படுதல் ஆகும்.
இலங்கையினுடைய பெரும்பான்மையின கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியிருக்கும் இந்த ஒற்றை ஆட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு ஒரு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை கீழ்வரும் காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |