சிங்களமயமாக்கலுக்குத் துணை போகும் தமிழ் எம்.பி-க்கள்...! கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி

Tamils Gajendrakumar Ponnambalam Sri Lanka ITAK
By Bavan May 11, 2026 11:53 AM GMT
Report

வடக்கில் எம்.ஏ. சுமந்திரன் போல கிழக்கில் இரா. சாணக்கியன் இங்குள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அடக்கி சிங்களமயமாக்கலுக்குத் துணை போவதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வடமுனை ஊத்துச்சேனை கிராம மக்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று (10-05-2026) கட்சியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தலைமையில் ஊத்துச்சேனையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு மீன் மற்றும் கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்ய இலங்கைக்கு அனுமதி

அமெரிக்காவிற்கு மீன் மற்றும் கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்ய இலங்கைக்கு அனுமதி

வடகிழக்கில் பெரும்பான்மை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக இருக்கக் கூடாது என்பதனால் பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து குடியேற்றங்களைச் செய்து கொண்டு வருகின்றனர்.

அந்தக் குடியேற்றங்கள் தென் தமிழ்த் தேசத்தின் கிழக்கு மாகாணத்தில் பிரதானமாக முன்னெடுக்கப்படுகின்றன.

கூடுதலாக அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களில் இந்தத் திட்டங்கள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

சிங்களமயமாக்கலுக்குத் துணை போகும் தமிழ் எம்.பி-க்கள்...! கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி | Kajendrakumar Slams Shanakiyan Over Sinhalization

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் குடியேற்ற வேலைத்திட்டம் மிக மோசமாக இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தை முற்று முழுதாகச் சிங்களமயப்படுத்துவதற்கு மட்டக்களப்பு அதன் இதயமாக இருக்கிறது.

இதனை நேரடியாக மாற்றுவது மிகவும் கடினம் எனவே, கிழக்கு மாகாணத்தின் இரண்டு எல்லைகளை முற்று முழுதாகச் சிங்களமயமாக்குதல்  அதாவது அம்பாறையையும் திருகோணமலையையும் சிங்களமயமாக்கி அதில் இருந்து படிப்படியாக முன்னேறி மட்டக்களப்பைத் தனிமைப்படுத்திய பின்னர் மட்டக்களப்பில் கைவைக்கலாம் என்பதே ஒரு திட்டம்.

தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பொன்னாடை போர்த்தி கௌரவித்த விஜய்!

தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பொன்னாடை போர்த்தி கௌரவித்த விஜய்!

புலிகளின் போராட்டம் 

அதற்கமைய கிழக்கின் இரண்டு எல்லைகளைச் சிங்களமயமாக்கும் வேலைத்திட்டம் போர்க்காலத்துக்கு முன்னரே முடிந்தது.

எனவே, தமிழ் மக்களின் தேச அந்தஸ்தை அங்கீகரித்து எங்களை நாங்களே ஆளக்கூடிய சமஷ்டி தீர்வை வழங்க வேண்டும் அல்லது பிரிந்தாவது போக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் அரசியலில் 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடுத்தனர்.

அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் பெரியளவில் குடியேற்றம் செய்ய முடியவில்லை.

சிங்களமயமாக்கலுக்குத் துணை போகும் தமிழ் எம்.பி-க்கள்...! கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி | Kajendrakumar Slams Shanakiyan Over Sinhalization

ஆனால், 2009-க்கு பின்னர் போராட்டத்திற்கு ஒட்சிசனாக இருந்த மக்களை அழித்து இனவழிப்பைச் செய்த பின்னர் இன்று மட்டக்களப்பில் கைவைக்க ஆரம்பித்துள்ளனர். இதுதான் உண்மை.

கிழக்கில் விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதையடுத்து மாவட்டத்தைச் சிங்களமயப்படுத்தவும் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரையைக் கைப்பற்றவும் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் ராஜபக்ச தரப்பு மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்தது.

இதன்போது சோளச் செய்கை என்ற பெயரில் கள்ள உறுதிகளை வழங்கிச் சட்டவிரோதமாகச் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தினர்.

இதன்போதுதான் பண்ணையாளர்கள் கால்நடைகளைக் கொண்டு செல்லும்போது குடியேறிய சிங்களவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

மனைவி மீது துப்பாக்கி சூடு...! தப்பியோடிய கணவரை தேடி விசாரணை தீவிரம்

மனைவி மீது துப்பாக்கி சூடு...! தப்பியோடிய கணவரை தேடி விசாரணை தீவிரம்

தேசியப் பட்டியல்

இவ்வாறுதான் மட்டக்களப்பு எல்லைக் கிராமமான ஊத்துச்சேனை கிராமமும் அதே வேலைத்திட்டத்துக்குள் கொண்டுவரப்படுகின்றது.

மயிலத்தமடு - மாதவனைப் பிரச்சனையைக்கூட ஏன் மட்டக்களப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் தடவையாக வெளிக்கொண்டு வரவில்லை?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மட்டக்களப்புக்கு வந்து இந்தப் பிரச்சனை பற்றி முதல் தடவை கேட்டபோது அவர் அந்த இடத்திற்குச் சென்று முதல் தடவையாக ஊடகங்களுக்கு வெளிக்கொண்டு வந்தார்.

சிங்களமயமாக்கலுக்குத் துணை போகும் தமிழ் எம்.பி-க்கள்...! கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி | Kajendrakumar Slams Shanakiyan Over Sinhalization

ஏன் இங்கு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அநியாயத்தை முன்னுரிமைப்படுத்தி வெளிக்கொண்டு வரவில்லை?

சிங்களமயப்படுத்துகின்ற வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் ஒரு எல்லை வரைக்கும் கொண்டு போவதற்கு இந்த மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அமைதியாக இருந்தனர் ?

அமைதியாக இருந்தால் மட்டும்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற செ. கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வந்து பேசினால் தேவையில்லாத பிரச்சனையை எழுப்புகிறார்கள் என்று பொய்யைச் சொல்லிக் கொச்சைப்படுத்தி இன்னும் கொஞ்சக் காலம் மூடி மறைக்கலாம் என்பதுதான் நோக்கமாக இருக்கலாம்.

அவர்கள்தான் உங்களிடம் வாக்குக் கேட்கப் போகின்றனர். உங்கள் பிரச்சனையை முன்நின்று வெளிக்கொண்டு வரவேண்டியது அவர்களின் பொறுப்பு. அது ஏன் நடக்கவில்லை ? ஏனென்றால் அவர்களும் இதற்கு முழுமையாகத் துணை போகின்றனரா ?

உர விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

உர விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

தமிழ்த் தேசியம் 

வடக்கில் இருக்கும் எம்.ஏ. சுமந்திரன் போல கிழக்கில் இருக்கும் இரா. சாணக்கியன் இங்குள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அவர்களை அடக்கி, இந்தச் சிங்களமயமாக்கலுக்குத் துணை போவதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா ?

நான் கேட்பது தமிழ்த் தேசியம் பேசி நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுகின்ற தமிழரசு கட்சி உறுப்பினர்களைப் பற்றித்தான்.

உண்மையில் எல்லைப் பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் உள்ள மக்களைத் தக்கவைத்தால் மட்டும்தான் இந்த மண்ணில் வாழ முடியும்.

சிங்களமயமாக்கலுக்குத் துணை போகும் தமிழ் எம்.பி-க்கள்...! கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி | Kajendrakumar Slams Shanakiyan Over Sinhalization

இந்த மண்ணை விட்டுவிட்டுப் போவீர்களானால் இந்தக் காணி சுருங்கும். இந்த இடம் தொடர்ந்து தமிழர்களுடையதாக இருக்க முடியுமா ? எல்லையைப் பாதுகாப்பது என்றால் அந்த எல்லையில் இருக்கக்கூடியவர்களுக்கு வசதிகளையும் அவர்களது பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தால் மட்டும்தான் அவர்கள் நின்று பிடிப்பார்கள், எங்களது நோக்கம் அதுதான்.

நாங்கள் உங்களைத் தேடி வருவதற்கான காரணம், எங்களுடைய அரசியல் தமிழ்த் தேசத்தைப் பாதுகாப்பதாக இருந்தால் எங்கள் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

எல்லைகள் பாதுகாக்கப்படாது இருந்தால் எங்கள் தேசத்தின் நிலப்பரப்பு சுருங்கும் அதுதான் எதிரியின் விருப்பம்.

ஆகவேதான் நாங்கள் எங்கு மக்கள் பிரச்சனையாக இருக்கின்றதோ அங்கு தேடிச் சென்று அந்தப் பிரச்சனைகளை ஆகக் குறைந்தது வெளிக்கொண்டு வருவோம் என நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

பலத்த மின்னல் தாக்கம்! மக்களே அவதானம்

பலத்த மின்னல் தாக்கம்! மக்களே அவதானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026