தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் 102 பேருக்கு கொரோனா! உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை
sri lanka
people
kalutara
By Shalini
களுத்துறை வடக்கில் ஒரு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் 102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
குறித்த தொடர்மாடி குடியிருப்பில் உள்ள 170 பேர் மீது பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நடுத்தர வயதுடையவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதையடுத்து குறித்த குடியிருப்பு மூடப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்படாதோர் தனிமையில் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்