கண்டியில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு காரணம் கண்டுபிடிக்கப்பட்டது
Death
Investigation
Kandy
By Vasanth
கண்டி - பூவெலிகட பகுதியில் 5 மாடி கட்டடம் ஒன்று தாழிறங்கியமைக்கு காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் தரமின்மையும் கட்டுமான பணிகளின் போது இழைக்கப்பட்டுள்ள தவறுகளுமே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட குழு இதை தெரிவித்துள்ளது. இவ்வாறு கட்டடம் தாழிறங்குவதற்கு இயற்கை சீற்றங்களோ அல்லது புவிச்சரிதவியல் விடயங்களோ காரணமாக அமையாது.
குறித்த கட்டிடத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் தரமின்மையும் கட்டுமான பணிகளின் போது இழைக்கப்பட்டுள்ள தவறுகளுமே இவ்வாறு கட்டடம் தாழிறங்குவதற்கு காரணம் என அந்த குழு குறிப்பிட்டுள்ளது.
Tags :
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி