சிங்கள மக்கள் தொடர்பில் தலைவர் பிரபாகரன் எங்களுக்கு கற்றுத் தந்தது இது தான்! தமிழ் தொழிலதிபர் வெளிப்படை
சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளை உருவாக்குவது ஒரு சில நபர்களே. எங்களுடைய தலைவர் சிங்கள மக்களை எதிரிகளாக பார்க்க கற்றுத்தரவில்லை என புலம்பெயர் தமிழ் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
தெற்கிலிருந்து வடக்கிற்கு வரும் அரசியல்வாதிகள் போலியான வாக்குறுதிகளை அளித்து விட்டு கொழும்பு திரும்பிவிடுவதாகவும் பின்னர் அந்த வாக்குறுதிகளை மறந்து விடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றின் விசேட செவ்வியிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிங்கள மக்கள் எமது எதிரிகள் அல்ல
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, "தமிழர்களாகிய நாம் சிங்களவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாம் ஏற்கனவே சிங்களவர்கள் பலருடன் வேலை செய்கின்றோம், தனிப்பட்ட ரீதியில் எனக்கு பல சிங்கள நண்பர்கள் இருக்கின்றார்கள்.
நாங்கள் ஒன்றாக விளையாடுவோம், நாங்கள் ஒன்றாக சாப்பிடுவோம், சிங்களவர்கள் எங்களது எதிரிகள் அல்ல வியாபாரம் ஒன்றாக இணைந்து செய்வோம், நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே.
எனினும் ஒரு சிலரே பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். அவர்களது நன்மைக்காக இவ்வாறு பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.
எப்பொழுதுமே எங்களுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்களுக்கு சொல்லித் தந்தது, சிங்கள மக்கள் எங்களது எதிரிகள் அல்ல என்று.
எப்பொழுதெல்லாம் அவர் உரையாற்றினாரோ அப்பொழுதெல்லாம் விசேடமாக அவர் இதனைக் குறிப்பிடுவார்.
சிங்கள மக்கள் எமது எதிரிகள் அல்லர் அவர்கள் எங்களது சகோதரர்கள் என கூறியிருக்கின்றார். சகோதர சகோதரிகளாக வாழ வேண்டுமெனவும் கூறியிருக்கின்றார். என்றார்.
உரையாடலின் ஒரு பகுதி...
கேள்வி - உங்கள் எல்லோருக்கும் தெரியும் நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன் என்பது. நான் யாழ்ப்பாணத்தின் ஆணையிறவு பகுதி பகுதியை சற்றே கடந்ததன் பின்னர் யாழ்ப்பாணம் இயக்கச்சி பகுதி அமைந்துள்ளது.
மணற்பாங்கான இந்தப் பகுதியின் இரண்டு பகுதிகளிலும் கடல் சூழ்ந்துள்ளது. மிகவும் ரம்யமான ஓர் இடமாக பொலிவுடன் காட்சியளிக்கும், இந்த பகுதியை வளமான நிலமாக மாற்றியவர் அவர்தான், இவருடன் எனக்கு மொழி தொடர்பான பிரச்சனை ஒன்று உள்ளது. எந்த மொழியில் பேசுவது என்பது புரியவில்லை.
நான் இன்று ரிச்சா இயற்கை பண்ணை, ரிச்சா ஹோட்டல் என்பனவற்றின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரனுடன் இணைந்திருக்கின்றேன்.
வணக்கம்…
பாஸ்கரன் - வணக்கம்…
சதுர - உங்களால் சிங்களம் பேச முடியுமா அல்லது சில சொற்கள் பேச முடியும்.
பாஸ்கரன் - சில வார்த்தைகளை பேச முடியும்.
சதுர - தமிழ் மொழியில் பேச முடியுமா?
பாஸ்கரன் - நான் தமிழன் தமிழ் பேச முடியும்.
சதுர - ஆங்கில மொழி?
பாஸ்கரன் - ஓரளவு பேச முடியும்.
சதுர - இந்த நிகழ்ச்சியை மூன்று மொழிகளிலும் நடத்த நேரிடும் என நான் நினைக்கின்றேன். எனது குறைபாடுகள் இருந்தால் அது உங்களுக்கு தெரியும். அதே போல் இவரது குறைபாடுகள் இருந்தால் அதுவும் தெரியும்.
ஏனென்றால் எனக்கு தமிழ் மொழி புரியும், கொஞ்சம் பேசத் தெரியும் சில கேள்விகளை கேட்பதற்கு என்னால் முடியும் ஆங்கில மொழியில் பேசிக்கொள்ள முடியும்.
எனினும் நாம் இருவரும் கூறினோம் இதனை சமாளிக்க முடியும். எனக்கு சிங்கள மொழி நன்றாக தெரியும். இவருக்கு தமிழ் மொழி நன்றாக தெரியும். எனினும் இந்த ஊடாடலுக்கு மொழி ஒரு தடையாக இருக்கப் போவதில்லை.
புலம்பெயர் இலங்கையர்களில் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவர் தான் கந்தையா பாஸ்கரன். அவர் இலங்கைக்கு வருகை தந்து 150 ஏக்கர் தரிசு காணியை கொள்வனவு செய்து அதில் பத்தாயிரம் தென்னை மரங்களை நாட்டி இந்த பூமியை செழிப்பாக்கி உள்ளார்.
இங்கு வாழ்பவருக்கு தொழில் வாய்ப்பு வழங்கி ஹோட்டல் ஒன்றை அமைத்து இயற்கை பண்ணை ஒன்றை உருவாக்கி ஆச்சரியப்படும் அளவிற்கான சேவையை வழங்கியுள்ளார்.
நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இவ்வாறானவர்களே இந்த நாட்டுக்கு பணத்தை கொண்டு வர வேண்டும் பணம் இல்லாத இந்த தருணத்தில் இவர்கள் வரவேண்டும். பணத்தை கொண்டு வர வேண்டும். அதனால் தான் நாம் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்தோம்.
ஆணையிறவு கடந்த காலங்களில் தெற்கிலிருந்து யானைகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்த இடம் பயன்படுத்தப்பட்டது. இதனை இதனால் தான் ஆணையிறவு என இதற்கு பெயிரிடப்பட்டது.
நான் உங்களுக்கு நன்றி பாராட்டுகின்றேன். இவ்வாறான ஓர் பகுதிக்கு பாரிய சேவையை வழங்குவது பாராட்டுக்குரியது. மக்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கு நீங்கள் உதவி செய்திருக்கின்றீர்கள்.
இந்த உரையாடலை ஆரம்பிப்பதற்கு நீங்கள் இந்த பகுதியை பகுதியில் பிறந்தீர்களா? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கின்றேன். அல்லது வேறு ஒரு பிரதேசத்தில் பிறந்தீர்களா?
பாஸ்கரன் - இல்லை இல்லை நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன்.
சதுர - யாழ்ப்பாணம்?
பாஸ்கரன் - ஆம். சதுர யாழ்ப்பாண நகரிலா?
பாஸ்கரன் - யாழ்ப்பாணத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டத்தரிப்பு எனும் நகரில் நான் பிறந்தேன்.
சதுர - நீங்கள் இன்னமும் அந்த இடத்தில் வசிக்கின்றீர்களா?
பாஸ்கரன் - இல்லை நான் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றேன்.
சதுர - 30 ஆண்டுகள் ஹோலந்தில் வாழ்ந்து ஏன் இவ்வாறான ஓர் முதலீட்டை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தீர்கள்? ஆணையிறவுக்கு ஏன் கொண்டு வந்தீர்கள் என நான் சிந்திக்கின்றேன்.
பாஸ்கரன் - நான் 1991 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினேன். வேறொரு நாட்டில் வாழ்ந்தாலும் எனது இதயம் இந்த நாட்டிலேயே இருந்தது ஏனென்றால் நான் இந்த இடத்தை நேசிக்கின்றேன்.
நான் இந்த மக்களை நேசிக்கின்றேன் இந்த தேசத்தை நேசிக்கின்றேன். நான் எப்பொழுதும் எனது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை கொண்டிருக்கின்றேன்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இல்லை 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் சமூக சேவைகளில் ஈடுபட்டு இருக்கின்றேன். பின்னர் ஏதாவது ஒரு துறையில் பாரியளவில் சேவையாற்ற விரும்பினேன்.
நினைத்து மக்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கும் ஒரு பிரதான நோக்காக கொண்டே செயல்பட்டேன். இரண்டாவதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்ய விரும்பினேன். சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும் போது இயல்பாகவே பலருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கின்றது. இது ஓர் சிறிய உதாரணமாகும்.
என்னுடைய நிறுவனத்தில் 300 பேர் நிரந்தர பணியாற்றுகின்றனர். 300 வீடுகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கின்றது. இன்னும் அதிக அளவிலான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும் என நினைக்கின்றேன். அதுவே எனது அவா.
எனக்கு தெரியும் புலம்பெயர் சமூகத்தினர் இங்கு வந்து சிறிய வியாபாரங்களை மேற்கொள்கின்றனர். எனினும் பலர் அரசியல் தீர்வு திட்டம் எட்டப்படும் வரை காத்திருக்கின்றனர் பலர் அரசியல் தீர்வு திட்டம் தீட்டப்படும் வரை பாரிய அளவு முதலீடுகளை செய்ய காத்திருக்கின்றார்கள்.
அரசியல் தீர்வு ஏட்டப்பட்டால் நிச்சயமாக மிகப் பெரிய அளவிலான முதலீடுகளை செய்வார்கள். எனக்கு புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த பலரை தெரியும் அவர்கள் மிகுந்த செல்வந்தர்கள் அவர்களிடம் பணம் உள்ளது.
நீங்கள் கூட பல்வேறு நாடுகளில் பல்வேறு நபர்களை சந்தித்து இருக்கின்றீர்கள். அவர்களுக்கு இங்கு வர விருப்பம் உள்ளது என நான் நினைக்கின்றேன் அவர்கள் வருவார்கள் என்றே கருதுகின்றேன்.
சதுர - எவ்வாறான அரசியல் தீர்வு திட்டத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
பாஸ்கரன் - நான் பல மில்லியன் டொலர் முதலீடு செய்தாலும் எனக்கு எவ்வித பாதுகாப்பும் கிடையாது. நான் இங்கு முதலீடு செய்தால் எனக்கு ஒரு பாதுகாப்பு தேவை எனக்கு தெரியாது.
நாளை என்ன நடக்கும் என்பது பற்றி நிச்சயமற்றத்தன்மை நிலவுகின்றது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு போர் இடம் பெற்றது.
நாளை என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது ஏனென்றால் 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு போர் இடம் பெற்றது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான அரசியல் ரீதியான பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை.
அரசியல் ரீதியான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால் பாரிய அளவில் முதலீடுகள் செய்யப்படும் என நினைக்கின்றேன். நான் பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறேன் அங்கு பல்வேறு நபர்களை சந்தித்து இருக்கிறேன்.
அவர்களில் பலர் அரசியல் ரீதியான ஸ்திரமான தீர்வு திட்டம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தாம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு போதிய அளவு பாதுகாப்பு உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.
அந்த நம்பிக்கை உருவாக்கப்பட வேண்டும். இலங்கையில் முதலீடு செய்ய இது உசிதமான தருணம் அல்ல என அவர்கள் நினைக்கின்றார்கள்.
சதுர - எனினும் இலங்கையில் எவருக்கும் முதலீடு செய்ய முடியும் எவ்வித தடையும் இல்லை. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இலங்கை முதலீட்டு சபையில் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் இங்கே தங்க விரும்பினால் அல்லது வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்க விரும்பினால் உங்களுக்கு அதனை செய்ய முடியும். யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். ஏன் நீங்கள் அரசியல் ரீதியான தீர்வு திட்டம் எட்டப்படும் வரையில் காத்திருக்கின்றீர்கள்?
பாஸ்கரன் - இல்லை அரசியல் தீர்வு திட்டம் என நான் குறிப்பிடுவது, நான் இங்கு முதலீடு செய்தால் நாளை என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. எவ்வித உத்தரவாதமும் கிடையாது. மீண்டும் போர் ஏற்படலாம் மக்கள் நினைக்கின்றார்கள். மேலும் பிரச்சினைகள் அதிக அளவில் ஏற்படலாம் என நினைக்கின்றார்கள்.
சதுர - உங்களது மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்றார்கள்… அப்படியா?
பாஸ்கரன் - நான் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன், அதனால் தான் நான் இங்கு வந்தேன். நான் நிறைய மக்களை சந்தித்து இருக்கின்றேன்.
இலங்கையில் பாரியளவு முதலீடு செய்ய அவர்கள் விரும்புகின்றார்கள். தங்களது தாய் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென அவர்கள் நினைக்கின்றார்கள். அத்துடன் அரசியல் ரீதியான தீர்வு திட்டம் எட்டப்பட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
அதனையே அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள். நான் நினைக்கின்றேன் அரசாங்கத்திற்கு அது தெரியும் அதனால் தான் கட்சிகள் இணைந்து அரசியல் தீர்வு திட்டத்தை எட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ் கட்சிகளுடன் இது குறித்து பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. நிரந்தர தீர்வு திட்டம் ஒன்றை எட்டும் நோக்கில் இந்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசியல் ரீதியான தீர்வு திட்டம் எட்டப்பட்டால் நிச்சயமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இங்கு வருகை தந்து, முதலீடு செய்வார்கள் என்பதனை நான் திடமாக நம்புகிறேன்.
சதுர - அரசியல் தீர்வு திட்டம் என நீங்கள் கூறுவது 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனையா?
பாஸ்கரன் - நான் அரசியல்வாதி இல்லை. எனக்கு பாதுகாப்பே தேவை. சிங்கள மக்கள் எதனை அனுபவிக்கின்றார்களோ அதற்கு நிகரானதை நானும் அனுபவிக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும். சமமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
அதனையே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனக்கு 13 அல்லது 14 அல்லது வேற எதுவும் தேவையில்லை. எமக்கு எங்களது உயிர்களைப் பாதுகாக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒரு சிறிய உதாரணத்தை காண்பிக்கின்றேன்.
இது இயக்கச்சி, இந்த பண்ணையைச் சுற்றி பத்து இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன.
சதுர - 10?
பாஸ்கரன் - 10 இராணுவ முகாம்கள் எனது பிள்ளைகள் இங்கு வர விரும்புவதில்லை. அவர்கள் அஞ்சுகின்றார்கள்
சதுர - பாஸ்கரன் பெரிய உதாரணம் ஒன்றை தருகின்றார். அவரது பிள்ளைகள் இலங்கைக்கு வர விரும்புவதில்லை ஏனென்றால் இந்த பண்ணையை சுற்றி 10 இராணுவ முகாம்கள் காணப்படுகின்றதாக அவர் தெரிவிக்கின்றார்.
நாம் தெற்கில் இருந்து பார்க்கும்போது இதனையே பாதுகாப்பு என கருதுகின்றோம். இந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை நாம் விரும்புகின்றோம்.
எனினும் பாஸ்கரன் அதனை அவ்வாறு நினைக்கவில்லை. அவர்கள் வேறு விதமாக நினைக்கின்றார்கள். நீங்கள் கூறுவது போல் தெற்கு மக்களுக்கு செய்யக்கூடிய வடக்கு மக்களினால் செய்ய முடியாத விடயங்கள் என்ன?
சதுர - பாஸ்கரன் நீங்கள் சுதந்திரத்தை உணர்கின்றீர்களா? எனினும் நான் அவ்வாறு உணரவில்லை. எனக்கு சுதந்திரம் உண்டு என்பதை நான் உணரவில்லை. அது ஒரு வேறுபாடாகும். உங்களுக்கு இலகுவில் புரிந்து கொள்வதற்கு நீங்கள் எங்கு பிறந்தீர்கள்? பண்டாரவளை அல்லது மொரட்டுவ அல்லது வேறு எங்கோ...
சதுர - மொரட்டுவ.
பாஸ்கரன் - இல்லை. உதாரணத்துக்கு சொல்கின்றேன். உங்களது வீட்டைச் சுற்றி 10, 11 இராணுவ முகாம்கள் இருக்கின்றதா?
சதுர - இல்லை
பாஸ்கரன் - அப்படி என்றால் ஏன் எனக்கு அவ்வாறு இருக்க வேண்டும். அந்த உணர்வையே நான் குறிப்பிடுகிறேன். அது ஒரு வேறுபாடு. அதனாலேயே நாம் சமமான சுதந்திரத்தை கோருகின்றோம்.
எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் இலங்கைக்கு வர விரும்புவதில்லை ஆங்காங்கே இராணுவத்தார் துப்பாக்கிகளுடன் இருக்கும்போது அவர்கள் இலங்கைக்கு வர விரும்புவதில்லை.
அவர்கள் இந்தியாவிற்கு செல்லவே விரும்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் இந்தியா செல்கின்றார்கள். எனினும் எனது பிள்ளைகள் இங்கு வரவேண்டும் என நான் விரும்புகின்றேன்.
அவர்கள் இங்கு வியாபாரங்களை தொடங்க வேண்டும் என விரும்புகின்றேன். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என விரும்புகின்றேன் அவர்கள் முயற்சியான்மையுடன் ஊடாக இந்த நாட்டிற்கு எதனையாவது சேர்க்க வேண்டுமென விரும்புகின்றேன். அவர்கள் மொத்த தேசிய உற்பத்திக்கு ஏதாவது ஒரு பங்களிப்பு செய்ய வேண்டும் என நினைக்கின்றேன் எங்களுக்கு இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் அல்லவா?
சதுர - உங்களிடம் இருப்பது புலியின் பணமா
பாஸ்கரன் - புலம்பெயர் சமூகத்தினரும் எல்லோரிடமும் எல்.ரீ.ரீ.யின் பணம் இல்லை. எல்.ரீ.ரீ.ஈ பணத்தை கொண்டு அவர்கள் வியாபாரங்களை செய்வதில்லை.
அதே நேரத்தில் எல்.ரீ.ரீ.யின் பணத்தை கொண்டு வந்து இங்கு முதலீடு செய்கின்றார்களா என எனக்கு தெரியாது. நாங்கள் 20 ஆண்டுகளாக ஓர் வியாபாரத்தை அபிவிருத்தி செய்து அந்த நிறுவனத்தை விற்று அந்த பணத்தில் புது வியாபாரங்களை மேற்கொள்கின்றோம்.
அந்த பணத்தில் கொஞ்சம் பணத்தையே இங்கு இலங்கையில் கொண்டு வந்து முதலீடு செய்து வியாபாரங்களை ஆரம்பித்திருக்கின்றோம். எங்களுடைய சமூகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த திட்டங்களையும் முன்னெடுக்கின்றோம்.
கிசுகிசு பேசுபவர்கள் எல்லா நேரத்திலும் அது பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். அது பற்றி நான் கவலை கொள்ள போவதில்லை. எங்களிடம் எல்.ரீ.ரீ.ஈ பணமில்லை.
அது பற்றி எனக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை. நான் எல்.ரீ.ரீ.ஈ பற்றி பேசப்போவதில்லை.
20 ஆண்டுகளாக கடின உழைப்பைக் கொண்டு உழைத்த பணமே என்னிடம் உள்ளது. எப்பொழுதும் எனது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
சதுர - நீங்கள் இந்த திட்டத்தில் மகிழ்ச்சி அடைகின்றீர்களா?
பாஸ்கரன் - நிச்சயமாக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த ஆண்டில் அதிகளவான காலத்தை நான் இலங்கையிலேயே கழித்தேன். பல்வேறு விடயங்களை செய்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆம் நான் இதனை விரும்பி செய்கின்றேன்.
சதுர - இந்த இடத்தை ரீச்சா இயற்கை பண்ணை மற்றும் ரீச்சா ஹோட்டல் என பெயர் எழுதப்பட்டுள்ளது. எனினும் நீங்கள் ஒரு இயற்கை பண்ணைக்கும் அப்பால் பல்வேறு விடயங்களை செய்திருக்கின்றீர்கள்.
சிறுவர் பூங்கா ஒன்று கட்டியிருக்கின்றீர்கள் பல்வேறு மனதைக் கவரும் இடங்களை நிர்மானித்திருக்கின்றீர்கள். இதன் பின்னணியில் இருக்கும் மெய்யான நோக்கம் என்ன இது எந்த எண்ணக் கருவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?
பாஸ்கரன் - வடக்குக்கு தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றார்கள். எனினும் இங்கு பார்ப்பதற்கு பெரிதாக இடங்கள் எதுவும் இல்லை.
வடக்கு மக்களுக்கு பொழுது போக்குவதற்கான இடங்கள் மிகவும் குறைவாக காணப்படுகின்றது. எனது பிள்ளைகளை நான் இங்கு அழைத்து வந்தால் அவர்களுக்கு செல்லக்கூடிய இடங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே காணப்படுகின்றன. அவர்கள் ஒரு சில விடயங்கள் தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு விளையாடுவதற்கு இடம் இல்லை, அவர்கள் பொழுதுபோக்கு களியாட்டங்களில் ஈடுபட இடமில்லை. கடற்கரைக்குச் செல்ல முடியும்.
ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு செல்வோம். நல்லூர் கோவில் மேலும் சில இடங்களுக்கு மட்டுமே செல்வோம். யாழ்ப்பாணத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு.
ஆம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஓரிடத்தை உருவாக்க நான் விரும்புகின்றேன். மக்கள் வந்து தங்குவதற்கு, நல்ல உணவு உண்பதற்கு நல்ல உணவகம், பிள்ளைகள் விளையாடுவதற்கு ஒரு நல்ல விளையாட்டுக்கள் இவ்வாறான விடயங்கள் இருந்தால் பிள்ளைகள் வந்தால் அவர்கள் திரும்ப போக விரும்ப மாட்டார்கள்.
அவ்வாறான ஒரு நிலை தற்பொழுது காணப்படுகிறது. அதை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இடத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து 45 நிமிடங்கள் கிளிநொச்சியிலிருந்து 15 நிமிடங்கள் முல்லைதீவிலிருந்து 45 நிமிடங்கள் வவுனியாவிலிருந்து 45 நிமிடங்கள் இந்த இடம் வடக்கில் மத்தியில் அமைந்துள்ளது.
வடக்கில் இருக்கின்ற அனைவரும் இந்த இடத்திற்கு வர இலகுவாக அமைந்துள்ளது. புத்தளம், சிலாபம், மட்டக்களப்பு, திருகோணமலை ஏனைய பகுதிகளிலிருந்தும் அதிகளவானவர்கள் வருகை தருகின்றனர்.
இந்த இடம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர் மேலும் நாடு முழுவதிலும் உள்ள அனைவரும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.