8 மருத்துவர்கள் உட்பட 99 மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா -கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவலம்
corona
staff
doctors
galle hospital
By Sumithiran
ஓகஸ்ட் 1 முதல் 19 வரையான காலப்பகுதியில் 99 மருத்துவமனை ஊழியர்கள் கொவிட் -19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக காலி, கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 8 மருத்துவர்கள், 40 தாதியர்கள், 38 கனிஷ்ட ஊழியர்கள், 6 துணை மருத்துவப் பணியாளர்கள், ஒரு பிசியோதெரபிஸ்ட், 2 OIC கள், 2 கிளார்க் மற்றும் ஒரு காவலாளி ஆகியோர் அடங்குவர்.
இதனால் வைத்தியசாலை நிர்வாகம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகளும் பெருமளவில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி