விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு மன நலப் பரிசோதனை
புதிய இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட ஏழு பேரையும் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினரால் நேற்று அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
தொடர்ந்து கஸ்ஸப்ப தேரரின் குழுவினருக்கு எதிராக மக்கள் அணி திரண்டதோடு, அவர்களது கூடாரங்களையும் கழற்றி எரிந்தனர். தொடர்ந்து அவ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினரை காவலில் எடுத்தனர்.
முதல் இணைப்பு

சாகும் வரையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களும், மூன்று பொதுமக்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று (12) காலை ருவன்வெலிசாய அருகே உள்ள சத்தியாகிரகத் தளத்தில் நிலவிய கடும் பதற்றம் காரணமாக,பலாங்கொட கசப்ப தேரர் மற்றும் மேலும் மூவரின் பாதுகாப்பைக் கருதி, அவர்கள் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டனர்.
விளக்கமறியல்
இதைத் தொடர்ந்து, பலாங்கொட கசப்ப தேரரை மருத்துவமனையில் சேர்க்க அனுராதபுர காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்திய அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள அநுராதபுர அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராகவும் சிறையில் உள்ள ஞானசாரதேரரை விடுதலை செய்யக்கோரியும் கஸ்ஸப்ப தேரர் உட்பட மூவர் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டதோடு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |