கதிர்காமத்தில் காணமாற்போன மில்லியன் பெறுமதியான இரத்தினக்கல்
missing
kataragama-devalaya
gem
By Sumithiran
இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவரால் கதிர்காமம் தேவாலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இரத்தினக்கல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை கதிர்காமம் தேவாலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 38 பவுண் தங்கத் தகடு காணாமல் போனமை தொடர்பில் அங்கொடவைச் சேர்ந்த வர்த்தகரான அகம்பொடிகே நிசசங்கலவின் மனைவியிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அங்கொட வர்த்தகரின் மகனின் தோஷத்தை போக்கவே 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03 ஆம் திகதி கதிர்காமம் தேவாலயத்திற்கு தங்க தகடு காணிக்கையாக செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.