காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் சமூக மட்டக் கலந்துரையாடல்!

Sri Lanka
By Beulah Nov 28, 2023 02:39 PM GMT
Report

காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக மட்டக் கலந்துரையாடல் 26/11/2023 அன்று ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி அல் மனார் மண்டபத்தில் நடைபெற்றது.

ஒன்றியத்தின் தலைவர் ULMN. தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் காத்தான்குடி சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் புத்திஜீவிகள், தொழில்வாண்மையாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,உலமாக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

தலைவர் தனது உரையில் முஸ்லிம் சமூகம் பிரதேசரீதியாக ,மாவட்டரீதியாக மாகாணரீதியாக மற்றும் தேசியரீதியாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை பட்டியலிட்டதுடன் முஸ்லிம் சிவில் சமூக செயற்பாடுகளில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக் காட்டியதுடன் வலுவான சிவில் சமூக கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுமா : நிரோஷன் பெரேரா கேள்வி!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுமா : நிரோஷன் பெரேரா கேள்வி!

சிவில் சமூக கட்டமைப்பு

மேலும் அவர் தனதுரையில் இத்தகைய சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்கி அண்மைக்காலமாக செயற்பட்டு வருவதாகவும் அக்கட்டமைப்பின் ஊடாக செய்துவரும் பணிகளை பட்டியலிட்டதுடன் காத்தான்குடி சார்ந்து பின்வரும் விடயதானங்களில் செயற்பட உள்ளதாவும் பட்டியலிட்டார்.

காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் சமூக மட்டக் கலந்துரையாடல்! | Kattankudy Community Level Discussion

அவை பின்வருமாறு,

  1. காத்தான்குடிக்கான காணிப் பிரச்சினைகளை தேசியமயப்படுத்தி அவற்றுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளல்.
  2. காத்தான்குடி கல்விசார் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளல்.
  3. காத்தான்குடி சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளை பெற முயலல்.
  4. இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் முஸ்லிம்களின் பங்கை உறுதிப்படுத்தல்,அதற்காக பாடுபடல் அவ்வப்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள், நிர்வாகப் பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புசார் பிரச்சினைகள் தொடர்பில் பணியாற்றல்.

மேற்படி விடயங்களை தெளிவுபடுத்தியதுடன் சமூகம் தந்திருக்கும் அனைவரும் இப்பணியில் ஈடுபட தம்மோடு இணைந்து செயற்பட வருமாறும் அழைப்பு விடுத்தார்.

காத்தான்குடி கல்விசார் பிரச்சினைகள்

தொடர்ந்து உரையாற்றிய ஒன்றிய உபதலைவர்களில் ஒருவரான HMM.பாக்கிர் ஆசிரியர் காத்தான்குடி கல்விசார் பிரச்சினைகளை விலாவாரியாக பட்டியலிட்டதுடன் எடுக்கப்படவேண்டிய அவசிய செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார்.

காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் சமூக மட்டக் கலந்துரையாடல்! | Kattankudy Community Level Discussion

தொடர்ந்து ஒன்றியத்தின் தலைவரால் காத்தான்குடியின் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலும் அமுல்படுத்தப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பிலும் மல்டிமீடியா சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒன்றிய செயலாளரும் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தருமான MMM.நழீமினால் இனப் பிரச்சினையில் முஸ்லிம்களின் வகிபாகம் தொடர்பில் கருத்துரை முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒன்றியத்தின் பொருளாலர் மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் MYM.ஆதத்தினால் காத்தான்குடியின் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரை முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து கலந்துரையாடலை ஒன்றியத்தின் மற்றொரு உபதலைவரான ஓய்வுபெற்ற அதிபர் SLA.கபூர் ஆரம்பித்து வைத்தார்.

மேற்படி கலந்துரையாடலில், RISE SRI LANKA நிறுவன தவிசாளர் KMM.நவாஸ், சமூக செயற்பாட்டாளர் முஜீப் ஜுனைட், மட்டக்களப்பு WAIT நிறுவன தவிசாளர் KMM.கலீல் தொல்லியல் ஆய்வாளர் ஜெஸ்மில் றகீம் சிரேஷ்ட சட்டத்தரணி A.உவைஸ் ஊடகவியலாளர் ஜலீஸ் ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்MHAM.இஸ்மாயில் உதவிப் பிரதேச செயலாளர் MM. அஸ்லம் சிரேஷ்ட ஆங்கில ஆசிரியர் RTM.அனஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் மெளலவிSMM. முஸ்தபா,சமூக செயற்பாட்டாளர் சாதிகீன் ஆகியோர் காத்திரமான கருத்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து ஒன்றியத்தின் தலைவரால் சபையோர் நோக்கி தம்மோடு இணைந்து பணியாற்ற வருமாறு விடுக்கப்பட்ட வோண்டுகோளை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மேற்சொன்ன ஐந்து விடயப்பரப்புகளிலும்,

திட்டமிட்ட மற்றும் முறைப்படுத்தப்பட்ட அடிப்படையில் செயலாற்றல்.

திட்ட முன்மொழிவுகளை தயாரிக்க ஒருநாள் அமர்வை நடாத்தல்.

தொடராக செயற்படல். போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்படும்

அமர்வில் விசேட வைத்திய நிபுணர் Dr.நிஹாஜ் அகமட், நஸீலா குழுமங்களின் பணிப்பாளர் MAM.உனைஸ், கிழக்குப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கை துறையின் பீடாதிபதி MM.முஜாகித் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இரவு பதினொரு மணியளவில் அமர்வு சலவாத்துடன் முடிவுற்றது.

பொதுநிறுவனங்களாகும் அரச கூட்டுத்தாபனங்கள்!

பொதுநிறுவனங்களாகும் அரச கூட்டுத்தாபனங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025