வரலாற்றில் முதல்முறையாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
கொரோனா காலத்தில் சுமார் 72 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவி வழங்க அரசாங்கம் ரூ .80 பில்லியனை செலவிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் .
கண்டி - கலகெதர பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கொவிட் 19 வைரஸ் பரவுதலை சிறந்த முறையில் கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை 10 ஆவது இடத்தில் இருப்பதாகவும், இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார்.
கொவிட் 19 வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் 61 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் மற்றும் குறைந்த வருமானம் உள்ள 1 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
வரலாற்றில் முதல்முறையாக, இப்பகுதியில் உள்ள அனைத்து வீதிகளையும் காபட் செய்யும் திட்டம் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வருகிறது, அதன்படி கலேகெதர தேர்தல் தொகுதியில் மட்டும் 60 கி.மீ வீதிகள் காபட் செய்யப்படும்.
மேலும் அரசாங்கத்தின் செலவில் இந்த வருடம் நாடளாவிய ரீதியில 14,026 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அதன்படி கலகெதர தொகுதியில் மாத்திரம் 124 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்..